kadhal kavithai
பிள்ளையென நினைத்தேன் உன்னை
பாசம் வைத்து பித்தானேன்ஒவ்வொரு முறை நீ உதைத்த போதும் களித்தேன்
உனக்கென்ன தெரியும் என் மார்பின் வலி
எனைவிட்டு நகரும்போது நடுங்கிப் போனேன்
பக்கமிருந்த நாட்களை பட்டியலிட்டேன்
மற்ற பெண்களைப்போல் நானில்லை
அதற்கு நான் நாணவில்லை
தாயாய் தாரமாய் தயாராகி வந்தேன்
தரமற்றவளோ என எண்ண வைத்தாய்
தவித்து நிற்கும் மனதை அடக்க முடியாமல் தவிக்கிறேன்…
Comments
Post a Comment